வா.. வா.. என் அன்பே - 28

1.8K 35 11
                                    

பகுதி - 28

அந்த பெண் ஒற்றை கண்ணடித்து.. ' அட முகத்தை ஸார்..' என்று கூறி சிரித்ததில்.. பொங்கிய சிரிப்பை , இரு கன்னங்களை கடித்து அடக்கிக் கொண்டு.. தன் கூலரை கண்களில் இருந்து அகற்றி.. சட்டை பட்டனைகள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொள்ள.. மேலும் அவனுடைய கண்களின் பளபளப்பிலும்.. அந்த கண்ணாடி இடம் பிடித்திருந்த விதத்தில் அவனது அழகு மெறுகேறியது.

ஜன்னலை ஒட்டிக் கொண்டு தாமரை இருக்க.. அவள் அருகே அமர்ந்திருந்தவனோ.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. முன்னிருந்த ஸீட்டின் கம்பியை பிடித்திருந்தவாறு அமர்ந்திருந்தான். மேலும் ஆணும் பெண்ணுமாய் அவன் அருகே அமரந்திருந்தவர்கள் கீழ் இறங்க வேண்டி எழ.. அந்த பின்னிருக்கையில் தற்பொழுது.. அவர்கள் இருவர் மட்டுமே.

குறும்பு மிளிர்ந்த கண்களை ஏறிட்ட துடுக்கு பெண்ணிற்கோ.. கண்டிப்பாக அவன் முகத்தை பார்த்துவிடும் வேகம்..

" என்ன பாஸ்.. முகத்தை காட்டச் சொன்னா.. கண்ணை காட்டுறீங்க.." என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லியவள்..

" அட.. கண் அழகு எப்படின்னு கேக்குறீங்களா.." என்று அதற்கும் ஒர் அர்த்தம் கற்பித்தவளாய்..

"ப்..ப்..பா... கண்ணழகன் டா.." என்று விஜய்சேதுபதி பணியில் அவர்களுள் மற்றொருத்திக் கூற.. மிகவும் கலாட்டாவை ரசித்தவனாய்.. வாய்விட்டு நகைத்திருந்தான்.

காலியாக இருந்த இடத்தை எப்பொழுதோ.. அவர்கள் நிறைத்திருக்க.. அவன் எதிரே நின்றிருந்த வாயாடிக்கு மட்டும் இடம் இல்லாமல் போனது. சரணின் அருகே அமர்ந்திருந்தாலும்.. கண்ணியமாய்.. விலகி அமர்ந்திருந்த பெண்களினின் செயலால்.. ரசினையை மட்டுமே விதைத்திருந்தது அவனுள். அவனுடைய சிரிப்பை விழிவிரித்து பார்த்திருந்த தாமரையை கண்டதும்.. மிக மிக.. நெருக்கமாக அமர்ந்திருந்த விதத்திலும்.. அவளுக்கு பொறாமையை தூண்டிவிட்டதோ..!

" ஓய்.. பாப்பா எழுந்திரு.. ஓடு.. ஓடு முன்னாடி போய் உட்காரு.." என்று தன் குரலை உயர்த்தி விரட்டியதில்.. பயத்தில் எழுந்தேவிட்டாள்.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now