வா.. வா.. என் அன்பே - 26

1.4K 36 14
                                    

பகுதி - 26


மிரண்டவளாய் கீழ் இறங்கிய தாமரையின் முகத்தை பார்த்த பிறகு ஆறுதலாக.. தோள் அணைத்த மயூரியின் மனமோ.. முழுமையாக

அவளை  மருமகளாய் ஏற்க துவங்கியது.

அன்றைய இரவு வரை முகத்தை தூக்கிக் கொண்டு இருந்தவன் உணவு அருந்தும் பொழுதே , வெளிநாடு செல்லப் போவதாக  அறிவித்தான் .

" அப்போ.. உங்க அப்பாவோட மரியாதை பற்றி நீ நினைக்கவே இல்லையா சரண்.." என்று மயூரி தன்  ஆதங்கத்தை குரலில் தேக்கியவறாக கேட்டிட..

அங்கிருந்த அனைவருக்கும் அதே சிந்தனை மட்டுமே.. இத்தனை நாட்களாக.. சரணின் மான்சியின் வாழ்க்கையை விமர்ச்சித்து.. அதில் அவமானங்களும் சங்கடங்களையும் சந்தித்து வந்தவர்களுக்கு.. அவனின் அயராத உழைப்பும்.. ராட்சத வளர்ச்சியுமே.‌‌ அனைத்தில் இருந்தும் வெளிவர பேருதவியாய் இருந்தது.

அவனுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை தொழில் வேறு குடும்பம் வேறு.. அந்த மாய உலகத்தோடு.. எதார்த்தத்தை என்றுமே இணைக்க விரும்பாதவர்கள்.. ஆனால் நாம் மட்டும் அவ்வாறு யோசித்து என்ன பயன்..

சரண் அதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.. கண்டுக்கொள்ளாதவன் போல் உணவிலேயே கவனமாக இருக்க.. "சொல்லு சரண்.." என்று கோபமாகவே கத்தியிருந்தார்‌.

அப்பொழுதும் வெகு நிதானமாக அவரை ஏற்றிட்டு.." நான் ஏன் மாம் யோசிக்கணும்.‌ அவரு என்னை யோசிச்சாரா.. " என்றான் அசால்ட்டாக..

விக்கியை உடன் அழைத்ததற்கோ.. அவன் மறுத்திருக்க.. " என்ன போலீஸ் வேலைல சேரலேன்னு.. பாடிகார்ட் வேலை பாக்கப் போறியா.."  என்று தாமரைக்கு துணையாக அவன் இருப்பதை புரிந்துக் கொண்டு  கிண்டல் அடித்தவன்..

" உன் வேலை எல்லாம் யாரு பாக்குறது.. உன் அப்பனா பார்ப்பான்.. வாடா.. நீயும் என் கூட.. " என்று பல்லை கடிக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now