வா.‌. வா.. என் அன்பே - 75

970 40 10
                                    

பகுதி - 75

எதை பார்த்தாலும் , எதை தொட்டாலும் ஆட்டுவிக்கும் தாமரையின் நினைவுகளை... அவ்வளவு எளிதில் அவனால் கடந்துவிட முடியவில்லை .  மான்சியால் ஏற்பட்ட வலியை குடிக்குள் மூழ்கி மறந்திருந்தவனால் , இவளிடம் அனைத்திலும் தோற்றுதான் போனான் . கண்களை மூடினாலே மிரண்ட பார்வை..  கெஞ்சும் முகம்.. துடிக்கும் உதடுகள்.. என்று பதிந்த ஒவியமாக வலம் வர.. கசக்கிப் பிழியும் உணர்வில் இருந்து தப்பிக்க முடியவில்லை .

தொய்ந்து அமர்ந்தவனுக்கு நாளைய பணிகளின் அட்டவணை அணி வகுத்து நின்றிருக்க.. தன் புத்தியின் திசையை மாற்ற நினைத்தவனாக , பணிக்குள் மூழ்க நினைத்து.. கையெப்பமிட வேண்டிய கோப்பைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.. மூன்றாவதாக இருந்ததோ ,
காற்றில் படபடத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த  வங்கியின் காசோலை .

அதனை பார்த்ததும் , சிறிதுநேரம் உறங்கிக் கொண்டிருந்தது.. செல்லப்பிராணி விழித்து துள்ளிக் குதித்தது போல்.. மீண்டும் , தாமரையின் அசைவுகள் . மென்மையாக , அவன் விரல்கள் காசோலையை வருட.. மூளையின் யோசனைகளும்.. அவளுடன் கழித்த உன்னத நினைவுகளை தாங்கியதாய்..

காதலில் கெஞ்சலும் மிஞ்சலும் சுகம்.. அந்த சுகங்களை  அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாள் தாமரை.

மனைவியின் மீது இருக்கும் நேசத்தை உணர்ந்த தருணத்தில் இருந்து , சரண் மித்ரன்  தயக்கம் சிறிதுமின்றி , நாள் தவறாமல் அவள் இடத்தில்.. அவன் காதலை உணர்த்திக் கொண்டே இருக்கவும் தவறியதில்லை .

அதுபோலவே , ஒருமுறை , வேலையின் காரணமாய் இரு தின வெளியூர் பயணத்தை முடித்து வீடு திரும்பி வந்தவன்.. அன்றைய இரவில் , எப்பொழுதும் போல் அவளின் விலகலை கண்டு மனம் சுருங்கினாலும் , வெளிக்காட்டாதவனாய்.. பின்னிருந்து அவளது இடையை இறுக்கிக் கொள்ள.. எப்பொழுதும் போல் வெடவெடத்தவளாய்.. மிரண்ட விழிகளால் ஆடவனை வீழ்த்த.. அழுத்தமாக அவள் இதழில் முத்தம் பதித்து , அவர்கள் உறவை நினைவுப்படுத்து முனைப்பில் இறங்க ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now