வா.. வா.. என் அன்பே - 67

1.1K 46 36
                                    

பகுதி - 67

ராமின் கோபத்தை எதிர்பார்க்காத தாமரை.. திகைத்ததோடு அல்லாமல் , அதில் இருந்த நியாயமும்.. அவர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் தனக்கான நேசத்தையும் புரிந்தவளுக்கோ.. தன் உடல் எடையும் பாரமாகி போன உணர்வு .

' அந்த நினைப்பு உனக்கு இருக்கா..' என்று ராமின் சாடல்.. உரிமையை கொடுத்துக் கொண்டிருக்கும் எங்களின் அன்பை நீ மறுத்துக் கொண்டிருக்கிறாய்.. என்றவரது  கோபம் புரட்டிப் போட்டதாய் .

இப்படி தான் அவனும் நினைத்து , வருத்தம் கொள்கிறானோ.. 'இதுக்கு மேல என் நேசத்தையும்.. காதலையும் எப்படி சொல்றதுன்னே தெரியலை.. பாப்பா..', என்று சரணின் குரலே காற்றில் கவிப் பாடியதாய்.. மாமனாரை , திரும்பி பார்த்தால்.. ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தார் . இங்கேயே, நின்றுக் கொண்டிருந்தால் அடுத்த சுற்று வருகையில் நிச்சயமாக அதற்கும் வசவுகள் காத்திருக்கும் என்பதால்..  நடப்பது நடக்கட்டும் என்று வீட்டை நோக்கி நகர்ந்திருந்தாள் . ஆனால் , சற்று தெளிந்த மனதுடன் .

டெல்லியில் , சரண் உடன் வந்திருந்த மற்றவர்களை தங்களது ஹோட்டல் அறையில் தங்கிக் கொள்ள கூறியவன்.. ரிச்சர்டோடு , அவன் இருப்பிடத்திற்கு வந்துவிட.. தலை சுற்றி போனவனாய் இருந்தான் ரிச்சர்ட் .

" ஸார்.. இங்க படுக்கறதும் கன்வீனியட்டான பெட்டும் இல்லை.. இங்க போய்.. ஏன்..", என்று இழுத்தவனாக ரிச்சர்ட் வாய் திறக்க..

" ம்ச்சு.. நான் ரொம்பவே உன் தங்கச்சியால டையர்ட்டா இருக்கேன்..  இதுல நீயும் ஆரம்பிக்காத‌..", என்று அனைவரையும்.. நேற்று நள்ளிரவு முதல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவனின் சொல்லைக் கேட்டு அதிர்ந்துவிட்டான் . அவனையும் மீறி ,

" நீங்க டையர்டா இருக்கீங்களா..", என்று வாய்விட்டு விட.. சரண் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொள்ள.. பாரு.. என்று கண்களால் கூறி தாமரையை அழைக்க.. (😂😂) எப்பொழுதும் , போல் அவன் அழைப்பை ஏற்காமல்.. வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள் . தொப்பென்று  ,  அலைபேசியை குஷனில் விட்டெறிந்தவனாய்.. படுக்கை அறைக்குள் நுழைந்து படுக்கையிலும் விழுந்துவிட்டான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now