வா.. வா.. என் அன்பே- 76

1.1K 41 17
                                    

பகுதி - 76

தான் படிக்கவில்லை என்பதை வருத்தம் தொய்ந்தவளாக கூறி தலையை கவிழ்ந்துக் கொள்ள.. சரணும் அமைதியை தத்தெடுத்தவனாய் இருந்தவன். அவளது சூடான கண்ணீர் பட்டு தெறித்ததில் தெளிந்து ,

" பாப்பா.. அப்போ படிக்கலேனா என்ன.. நான் சொல்லி தரேன்.. ஓகேவா..", என்று சமாதானம் செய்து.. கன்னத்தில் உரசிக் கொண்டிருந்த கூந்தலை தன் விரல்களால் அளந்தவனாக..
" நானும் உன்னை கஷ்டப்படுத்திட்டேனா.. ", என்றான் மிருதுவான குரலில்..
புரியாமல் மீன் விழியை விரித்து என்ன என்று பார்வையால் வினவ..

" நான் கொடுத்த பணத்தை நீ ஏன் தொடவே இல்லை..", என்று காரணம் தெரிந்துக் கொள்ள கேட்டாலும்.. மறந்தும் அவள் தன் மீது இருக்கும் காதலால் என்று சொல்வாள் என்று எல்லாம் அவனால் நினைக்க முடியவில்லை ‌ . அப்படி ஒரு எண்ணம் இந்த நிமிடம் வரை அவளிடத்தில் இருப்பது போல் தெரியாத பொழுது.. சில பல மாதங்களுக்கு முன்னால்.. ம்ஹும்.. வாய்ப்பே இல்லை என்று அழுத்தமாக அவன் மனம் நம்பியதால் வினவ ,

" அது எப்படி ஸார் என்னால முடியும்.. முன்னமே , நீங்க கொடுத்த பணத்தாலதேன் எங்க அம்மாவை ரெண்டு மாசம் இந்த பூமில புடுச்சுவச்சுக்க முடிஞ்சது.. அதுனாலதேன் என்னோடவும் இருந்தாக.. அதை மறந்துட்டு.. நீங்க உதவின்னு கேட்கறப்போ.. என்னால எப்படி காசுக்கு செய்ய முடியும்.. அதேன்.. அது மட்டுமில்ல.. மாமா.. உங்க ட்ரஸ்ட் மூலமாவே அம்முக்கு உண்டான அத்தனை செலவையும் பார்த்துகிட்டாக.. அப்புறம் எதுக்கு.. எனக்கு அந்த பணம்.. நானா எப்படி உங்கட்ட இதை பத்தி பேசுறதுன்னு சிந்திச்சுட்டு இருந்தேன்.. நீங்களே கேட்டிய.. என் கை நிறைய காசு இருந்தும்.. ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாம போச்சில்ல..", என்று எதையோ துவங்கி , தாய் தங்கையின் நினைவில் முடிய.. அப்படியை , குழந்தையை வாரி அணைப்பது போல் , மடியில் இருந்தவளை அள்ளி அணைத்துக் கொண்டவனுக்கும் , பாரம் ஏறியதாய்..

தாமரையின் இறுக்கத்தை மாற்ற நினைத்தவனாக , " ஓய்.. அது என்ன உங்க ட்ரஸ்ட்.. நம்ம ட்ரஸ்ட்.. புரிஞ்சதா.. ", என்று நெற்றியில் முட்ட.. அதிசயத்தை கேட்டது போல் விழி விரித்திருந்தாள்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now