வா.. வா.. என் அன்பே - 8

1.4K 38 22
                                    

பகுதி - 8

விக்கிக்கோ... அவள் அழைத்த 'அண்ணே' என்ற சொல்லே , அடுத்த அடியை எடுத்து வைக்கவிடாமல் கட்டிப் போட்டது என்றால் ... மேற்கொண்டு கூறியதில் முடிவெடுத்து , பயங்காட்டுவதை நிறுத்தி அமர்ந்துவிட்டான் .

" யார் நீ ? " என்று ஆத்திரத்தை அடக்கியவனாக கேள்வி கேட்டவனை.. அஞ்சி நடுங்கியவளாக கூறத் தொடங்கினாள் .

அவள் நிலையை கேட்டால் கல்லும் கரையும்.. விக்கி ஊனும் உயிரும் கொண்டவன்.. அவன் இளகாமல் இருப்பானோ.. அதுவரை கடைப்பிடித்திருந்த அதிகாரத்தனத்தை கைவிட்டவனாக.. மடித்து அமர்ந்து கதறி துடிப்பவளை பார்ப்பதற்கே , அவ்வளவு பரிதாபமாக இருந்தது . பாவம் , சிறுபெண் வயதிற்கு அதிகமான சோதனைகளை தாங்கிக் கொண்டுயிருக்கிறாள் என்றே தோன்றியது .

நேற்று வரை நடந்ததை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவள் , சரண்மித்ரனை பற்றி மட்டும் வாயே திறக்கவில்லை . பணம் தருவதாக கூறினார் என்றதோடு முடித்துவிட்டாள் . 

இந்த கணம் வரை அவன் அவளிடம் நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும்.. பேதைக்கு ஏனோ , அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுக்கத் தோன்றவேயில்லை . தவறானவனாக சித்தரிக்கவும் விரும்பவில்லை . அவள் அறிந்த சரண்மித்ரன் இப்படிப்பட்டவன் அல்ல.. அதுமட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் இருக்கலாம் . 

தன் தலையை முட்டியில் வைத்து முகத்தை மறைத்தை அழுது துடிப்பவளின்.. அருகே சென்று , மென்மையாக தலையை கோத.. வெடுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகளில் நிறைந்து வழிந்த வலி.. விக்கியை பெரிதும் திருப்பிப் போட்டது .

" ஷ்..ஷ்.. பயப்படாதம்மா.. நீ யாருன்னு தெரிஞ்சுக்க தான், இப்படி நடந்துகிட்டேன்.. நீ பயப்படுற மாதிரி நா கெட்டவன் இல்ல.. சரண் உன்ட்ட பணம் கொடுக்க சொல்லியிருக்கான் . என்ன காரணம் சொல்லலை.. பெரிய தொகை அதான்.. நீ பயப்படாத சரியா.. உனக்கு ஹெல்ப் பண்ண சொன்னான். அதுவும் இல்லாம தூங்கிற உனக்கு காவல் காக்க சொன்னதுல ரொம்பவே கடுப்பாயிட்டேன் . ஐயம் ஸோ ஸாரி ஸிஸ்டர்.." ,  என்று மென்மையாக சிரிக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now