வா.. வா.. என் அன்பே - 60

1.2K 47 25
                                    

பகுதி - 60

அலுவலகத்தில் முடிக்க வேண்டிய அவசர வேலைகள் வரிசைக்கட்டி நிற்க.. சரண் தந்தையிடம் அனுமதி வாங்கியவனாக.. அதில் மூழ்க.. ராம் , தன் நண்பனை காண சென்று வருவதாக கூறவும்..

" ம்.. நாம ஷாப்பிங் போகலாம்னு நினைச்சேனே டேட்.. ", என்று கூறினான்..

" நான் எதுக்கு சரண்.. தாமரைய அழைச்சிட்டு போ.. ", என்றார்..

" ம் அவளும் தான் டேட்.. நம்ம கடைக்கு.. அம்மாவையும் வர சொல்லுங்க .. ", என்று தாடை இறுக கூறியதிலேயே புரிந்துக் கொண்டார்.. பழைய கணக்கை தீர்க்காமல் ஓய மாட்டான் என்று..

" இது எதுக்கு கண்ணா இப்படி.. பேசாம.. சோஷியல் மீடியால அப்டேட் போட்டாலே போதுமே.. அவ  ஐடென்டி தெரிஞ்சிடுமே..", என்று தாங்கலாக கூற..

" நோ டேட்.. அவ விருப்பம் இல்லாம எதையும் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை.. அதேசமயம் , தாமரை யாருன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்..", என்று அவள் அன்று தன்னிடம் கூறிய பதிலை தெரிவிக்க.. புருவம் நெரித்தவராய் இருந்தார் ராம்..

" ஓ.. எப்போ.. ",

"ஆறு மணிக்கு கிளம்பி இருக்க சொன்னேன்..", என்றான் சரண்..

" ம்.. சரி.. நானும் மயூவும் அங்கே வறோம்.. நீ தாமரைய அழைச்சிட்டு வா..", என்று விடை பெற்றிருந்தார் .

கதிரவனுக்கும் விரைவாக உறக்கம் வந்துவிட்டது போல்.. கடல் மடித் தேடி.. ஓடிக் கொண்டிருந்ததில்.. ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுதினிலேயே.. இருள் கவிழ்ந்திருக்க.. தாமரையோ.. தன் எண்ணத்திற்குள் மூழ்கியவளாய் இருந்ததில் , நேரத்தை தவற விட்டிருந்தாள் .

அவனின் நேசத்தையே ஏற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாலும்.. ஆழ்மனதில் புதையுண்டு கிடந்த மித்ரனுக்கான தேடல்.. அதற்கான வெற்றி என்று அகமகிழ்ந்திருக்கும் போலும்.. தான் இறுக்கமா நெஞ்சில் புதைந்திருந்த செயல்.. அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்குமா.. இல்லை.. வெறுப்பையா.. என்று குழப்பத்தில் மட்டுமாக உழன்றுக் கொண்டிருந்தவளாய்.. 

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now