வா.. வா.. என் அன்பே - 120

1.7K 48 8
                                    

பகுதி - 120

ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணிநேரம் போதாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் சரண் மித்ரனுக்கு மனைவியை கவனித்துக் கொள்வது என்பது கூடுதல் சுமையான போதும் , விரும்பியே அப்பணியை செய்தான் .

அவன் தொழில் சார்ந்து இருக்கும் வேலைகளுக்கு நேர அட்டவணையின் படி செய்து முடிப்பவனால் , அவளிடத்தில் அவ்வாறு கடைப்பிடிப்பது என்பது இயலாத காரியமாகி போவதில் , அனைத்து வேலைகளிலும் தடைகள் ஏற்பட , கூடுதல் வேலைச்சுமைக்கு ஆளான போதிலும் , ஒருகணமும் தாமரையிடம் காட்டிக் கொண்டதே இல்லை .

இன்றைய தாமதத்தினால் காலையில் முடிவு செய்யப்பட்டு இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் பின்னிரவிற்கு மாற்றப்பட்டு இருக்க.. சரண் அவளை விட்டு விலகியதில் இருந்து சாப்பிடவும் நேரம் இல்லாதவனாய் சுற்றிக் கொண்டு இருந்தான் . புதிதாய் அதிமுக்கிய வேலைகளாக விளம்பர நிறுவனத்திலும் , வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் தங்கும் விடுதி ஏற்பாடுகளுக்காக தீவிரமாய் ஒருபுறம் நடைப்பெற்றுக் கொண்டு இருக்க‌. இதில் , அவனும் மான்சியும் நடித்த படத்தின் வெளியீட்டு ரெக்கைக்கட்டிப் பறக்க வேண்டிய நிலைக்கு ஆளானான் .

இதுவரை மனைவியின் முகம் பற்றி கெஞ்சிக் கொண்டு இருந்தவன் . அலுவலகத்திற்குள் நுழைந்த மறுநொடியில் இருந்தே தாமரையின் நினைவுகளை பின்னுக்கு தள்ளியவனாக வேலைகளில் மூழ்கிட , அவளை மீண்டும் அழைப்பதற்காகவும் அவனால் நகர முடியாது போகவே , அதன் பொறுப்பை மறக்காமல் மயூரியிடம் ஒப்படைத்தவனாய்.. தன் தொழில் நிமித்தமாக வெளியூருக்கு புறப்பட்டு இருந்தான் .

விக்கியின் அழைப்பிற்கும் பொறுமையாக பதில் பேசக் கூடிய நிலையில் இல்லாததால் , " ம்ச்சு.. நீ போய் அந்த பெண்ணை ஈவினிங் மீட் பண்ணீட்டு சென்னைக்கு வா ‌. ஐம் இன் ஃப்ளைட்..", என்று துண்டித்து விட்டான் . தன் தோழனின் சூழ்நிலை உணர்ந்தே இருந்த போதும் , இன்றைய நிலை விக்கிக்கு சிறு சலிப்பை உண்டு செய்து இருக்க.. வெறுத்தவனாக அழகர்மலையை நோக்கி தன் வண்டியை செலுத்தி இருந்தான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now