அன்பே - 4

1.6K 36 7
                                    

பகுதி - 4

அந்த மிகப் பெரிய ஹோட்டல்க்கு எப்படியோ தைரியத்தை வர வளைத்தவளாக வந்துவிட்டாள் . அவள் ஆடையில் இருக்கும் எளிமை அங்கிருப்போருக்கு பெரிதாக தெரியவில்லை போலும் . ஏனெனில் அவர்களை பொருத்தவரை அந்த உடையே புதுமை . பாரீஸில் புடவையைப் பற்றி எவருக்கு தெரியும் . ஆனால் இந்தியர்களின் சிறந்த அடையாளம் . அந்த அடையாளமே அவளை அங்கு அனுமதித்திருக்க காரணமாக இருந்தது .

வரவேற்பில் அவர்கள் சொல்லிய இடத்திற்கு வந்ததும் , அறையில் தன் விழிகளால் துழாவிட.. யாருமற்றிருந்தது .‌‌'  அம்மாடியோ.. எம்புட்டு பெரிய அறை..' என்று தனக்குள்ளே பிரம்மித்து ,' பேசாம அக்காவையும் கூட்டியாந்து இருக்கனும்' என்றும் புலம்பினாள் .

பெண்ணவளின் இதயத்துடிப்பு தடக்..தடக்.‌‌.. என்று இரயில் இன்ஞின் போல் தாளம் வாசிப்பில் வேகமாக இயங்க.. தனக்குத்தானே ஆறுதல் அளித்தவளாக... கதவின் அருகிலேயே இருந்தவளுக்கு நீர் விழும் சத்தம்... குளிக்கிறாங்களோ... என்று எண்ணியவளாக... நகர அடம் பிடிக்கும் கால்களிடம் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள் .

தன் புத்தி ஆயிரம் சமாதானம் சொன்னாலும்... இந்த நிலைக்கு தான் வந்திருக்க வேண்டாம் என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை .

படபடக்கும் இதயத்தோடும்.. புரியாத பயத்தில் நடுங்கும் உடலோடும் போராட முடியாதவளாக... அந்த அறையை மீண்டும் நோட்டம் விட... அழகிய மீன் தொட்டி கண்ணில் விழுந்தது . மெதுவாக பாதம் நோகாமல் அதன் அருகே சென்று  வேடிக்கை பார்த்த படியே இருந்தவளுக்கு... சிறிது நேரம்  வந்த இடம்.. நோக்கம்.. அனைத்து மறந்தவளாக நின்றிருந்தாள்..

குளியலறையிலிருந்து வெளி வந்த சரண்.. எதிரே தன்னை மறந்தவளாக துள்ளும் மீன்களை ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும்... கருப்பழகி.. என்று தமிழிலும் myrla..  என்று ப்ரென்சு மொழியிலும் தானாக வாய் முணுமுணுக்க... அணிய எடுத்திருந்த  இரவுடையை அப்படியே அருகில் இருக்கும் நாற்காலியில் விட்டெறிந்தவன்... பின்னோடு அவளை அணைத்து மஞ்சணையில் வீழ்த்தி , முழுதாய் படர்ந்திருந்தான் .

வா.. வா... என் அன்பே...حيث تعيش القصص. اكتشف الآن