வா.. வா.. என் அன்பே - 73

1.5K 45 7
                                    

பகுதி - 73

விக்கியின் ஆர்ப்பாட்டமான அழைப்பு.. விடியல் துவங்கியதில் இருந்து வந்த படபடப்பை முழுவதுமாக அகற்றி இருக்க.. அமைதியாய் ஒருமுறை மாடியை பார்வையிட்டவனாக நண்பனின் அருகே அமர்ந்துவிட்டான் .

" வாப்பா.. எப்படி இருக்க..", என்று பாலகிருஷ்ணனும் அன்னப்பூரணியும் விசாரிக்க.. வா ரிச்சர்ட்.. என்று ராமும் வரவேற்றவராய்.. நலம் என்பது போல் அனைவருக்கும் மையமாக தலையாட்டியவன் சிறு சங்கடத்துடன் காணப்பட..

" மச்சி.. ஹீரோவானதை மறைச்சுட்ட பார்த்தியா..", என்று குறைப்படுபவன் போல் விக்கி நண்பனை கேலி பேச..

" மூடீட்டு இருடா..", என்று சிரித்த முகமாய் பிறர் அறியாமல் நண்பனின்  தொடையை தட்டியவனாக அடக்கி.. பதற்றத்தை மறைக்க முயன்றவன்.. தாராவின் ஆழ்ந்த பார்வையை சந்திக்கும் தைரியம் இல்லாதவனாக தங்கைக்காக காத்திருக்க தொடங்கி இருந்தான் .

" வாப்பா ரிச்சர்ட்.."என்று சூடான பானத்தை அவன் கரத்தில் கொடுத்தவராய் சாவித்திரி வரவேற்க..

" உனக்கும் அந்த வீடியோ பத்தி தெரியாதா..", என்று இன்முகமாய் கேட்டு சிரித்திருந்தார்.

" ஆங்.. இல்லை மா..", என்று பதிலளித்திருந்தான் .

" அத்தை.. என்னோட இருக்கும் வீடியோவாவது ஃபுடேஜ்ல இருந்து சுட்டிருப்பான்.. ஆனா , எப்படி இவங்க சாப்பிட்டதை கவர் பண்ணினான்னு தான் புரியலை.. ", என்று உதடு சுழித்து மண்டை காய்ந்துக் கொண்டிருந்தாவனாக விக்கி .

" ம் அப்புறம் மச்சி‌.. நடிப்பு பக்கமும் வந்தாச்சு.. இனி.. சினிமாலேயும் ஜோடி புறாவா சுத்தப் போற..", என்று அதிகமாக ரிச்சர்டின் பொறுமையை சோதிக்க..

"  சரண் மேல கொலைவெறில.. நானே  இருக்கேன்.. எதாவது பேசி உன் உயிருக்கு ஆப்பு வச்சுக்காத..", என்று பல் கடிக்கவும்.. தன் நெற்றியை சுருக்கியவனாக.. யோசனையுடன் பார்க்க.. ரிச்சர்ட் எவ்வளவு மறைக்க போராடினாலும் , அம்மூயற்சியில் தோற்றவனாகவே வலி.. இயலாமை.. தவிப்பு.. என்று தெரிந்ததில்.. விக்னேஷ் முழுமையாக தன் விளையாட்டை கைவிட்டவனாக ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now