அன்பே - 17

1.3K 31 4
                                    

பகுதி - 17

மறுநாள் விடிந்ததும்.. ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த திருமணத்திற்கு சென்றவள்.. நன்பகல் பன்னிரண்டு மணி வரை அங்கேயே இருக்க நேரிடவே.. அதற்கு மேல் நீளாங்கரைக்கு சரண்மித்ரனின் வீட்டிற்கு விரைந்தாள் .

நேரடியாக பேருந்து இருக்காது என்பதால்.. செலவை பற்றி யோசிக்காமல் மெட்ரோ ரயிலை பிடித்து.. மௌன்ட் ரோடில் இறங்கி.. அங்கிருந்து பேருந்தில் ஏறி நீளாங்கரை செல்வதற்குள்.. மூன்று மணி நேரம் கடந்திருக்க.. அந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி.. அவன் வீட்டின் முன் இறங்கினாள் . அதற்கே மணி மூன்றுக்கு மேல் கடந்திருந்தது.. சுட்டெரிக்கும் சென்னை வெயில் அனைத்தும் அவள் தலையில் இறங்கியிருக்கவே.. மிகுந்த களைப்போடு இருந்தாள் .

ஆட்டோவில் இருந்து இறங்கியதும்.. பெரிய கேட் மட்டுமே வரவேற்க.. காவலாளி இருக்கும் துவாரத்தின் வழியே.. ராம் ப்ரசாத்தை பார்க்க வேண்டும் என்று கூறி.. தன் மொபைலில் இருக்கும் மெசேஜையும் காண்பிக்க.. அவரோ..

" ஒரு நிமிஷம் இருங்கம்மா.. " என்று தன்மையாக கூறியபின்.. தொலைபேசியில் தகவலை பரிமாற.. வாயிற்கதவில் நுழைய அனுமதி கிடைத்தது.

"தேங்க்ஸ் ண்ணே"என்று சிறு புன்னகையை சிந்தியவள்.. நடக்கத் தொடங்கவே.. மிகவும் பெரிய மாளிகை வரவேற்றது . தன் காரியத்தை பற்றியே, சிந்தித்து வந்தவளுக்கு.. மாளிகையின் அழகோ.. தோட்டத்தின் அழகோ.. கவராமல் போக.. அந்த வீட்டின் மேனேஜர் வரவேற்று.. வரவேற்பறையில் அமர வைத்திருந்தார் .

அதுவரை இருந்த தைரியம் ராம் ப்ரசாத்தின் வரவிற்காக, காத்திருந்த பொழுது முற்றிலும் வடிந்து போகவே.. அவசரப்பட்டுவிட்டேனோ.. என்று சிந்தித்தவளாய்.. நகங்களை கொய்து கொண்டிருக்கும் பொழுதே.. அவர் வந்துவிட்டார் .

மிக இயல்பான.. புன்னகையுடன் வந்தவர்.. இரு கரங்களையும் குவித்து.. "வாங்க.. உட்காருங்க.." என்று எதிரில் இருந்த கோச்சில் அமர்ந்துக் கொள்ளவே.. விழி விரித்து நின்றுவிட்டாள். அறுபதை தொட்டிருப்பவர். ஆனால் இளங்காளையர் போல் காட்சியளிக்க.. அவ்வளவு ஆச்சரியம்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now