வா.. வா.. என் அன்பே - 50

1.6K 48 26
                                    

பகுதி - 50

விழிகளில் வழியும் கண்ணீரில் வெளிப்படுகிறது.. அவள் இழந்த அருமையான காதலை.. பெற்றவள் கொடுத்த ஏமாற்றத்தை.. விடியலின் அழகை கண்கள் ரசிக்க மறந்து..  இயல்பான புன்னகையை உதிர்க்க இதழ்கள் மறந்து.. என்று தன் இயல்பை.. துள்ளலை.. மொத்தமாக தொலைத்து.. எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது மான்சிக்கு.. ஆனால் , இவற்றை எல்லாம் அறிந்த ஒருவன்.. ஆரவ் மட்டுமே..

அவன் இல்லாமல் போயிருந்தால்.. தன் சவப்பெட்டியும் செல்லரித்து போயிருக்கும்.. என்று எதைஎதையோ , எண்ணியவளாக.. ஒற்றை காஃபி கோப்பையை கையில் ஏந்தி வைத்து.. தலையை , ஜன்னலில் சாய்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவளுக்கு.. தனிமையும் இதத்தை தொலைத்துக் கொண்டிருந்தது . 

அவளை இவ்வளவு தவிப்போடு , இருக்க விட்டுவிடுவானா.. ஆரவ்..
உடனே , அழைப்பேசியின் வாயிலாக அழைத்துவிட்டான்..

" குட் மார்னிங் மான்சி.. என்ன.. காலைலேயே.. நான் பக்கத்தில இல்லேன்னு.. சோக கீதமா.. டோன்ட் வொரி‌.. டியர்.. மாமா சீக்கிரம் வந்திடுவேன்‌.. ", என்று உற்சாகத்தோடு கேலி செய்தவனின் உற்சாக அதிர்வலை.. அவளுக்கும் , உடனே உடலில் பாய..

" மார்னிங்.. பெட்டை விட்டு எழறதுக்கு முன்னாடியே.. இன்னைக்கு ஆரம்பிச்சிட்டியா.. நீ இல்லைன்னு நான் ஹாயா.. நேச்சரை என்ஜாய் பண்றேன்.. வித் மக் ஆஃப் காஃபி..", என்று மகிழ்ச்சி மனநிலை பரவியவளாய்.. அவனோடு , இணைந்து வம்பிழுக்க..

" ம்.. ம்.. நல்லா என்ஜாய் பண்ணிக்க.. நீயே நினைச்சாலும்.. நாளையில் இருந்து தனியா என்ஜாய் பண்ண முடியாது பார்த்துக்கோ.. ", என்றதும்..

" ம்.. இன்னைக்கே வரேன்னு சொல்லீட்டு.. நாளை வரப் போற தகவல் சொல்ல.. என்ன பில்டப் குடுக்குற நீ..", என்று சிரித்தவளாய் கூறினிலும்.. மேலும் , ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டுமா.. என்று மறுகியதை வெளிப்படுத்தாமல் இருக்க பாடுப்பட்டாள் .

" ஓய்.. நீயே அங்க இருக்கப் போறது இல்லை.. இதுல நானா.. நீ என்ன பண்ற.. சரியா பத்தே நிமிஷம்.. கிளம்பி கீழ வர.. அங்க நான் அனுப்பின ஆள் வருவான்.. அவன் கொடுக்குற டிக்கெட் வாங்கிக்கோ.. எட்டு மணி ஃப்ளைட்ல ஏறி திருப்பதி வர.. ஓகே.. கோ..கோ..", என்று அவசரப்படுத்த..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now