வா.. வா.. என் அன்பே - 102

1.7K 48 22
                                    

பகுதி - 102

சரண், அவளது இதழில் இதழை பதித்து ரசித்து சுகிக்க.. தாமரையின் , கரங்களோ அவள்.. கையில் வைத்து இருந்த ஆடையை நழுவவிட்டு இருந்தது ‌.

கண்கள் சொருகியவனாய் , கன்னம் தாங்கி நின்றிருந்தவனின் மயக்கத்தில்.. பெண்ணவள் கர்வமாய் புன்னகை சிந்த.. ஆடவனின் மற்றொரு கரமோ , அள்ளி முடித்து வைத்திருந்த கூந்தலுக்கு விடுதலை அளிக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்க.. அள்ளி முடிந்திருந்த முடிக்குள் இருந்த பின்களையும் முத்தத்தை வழங்கியவனாகவே அகற்றியவனாய்.. தன் திறமையை காட்டிக் கொண்டிருந்தான் . 

உச்சியில் இருந்த கூந்தலோ , கருப்பு அருவி போல் சரிந்து.. அவளது இடைக்கு சற்று மேல் வரை நீண்டு வளைந்து.. முதுகின் முழுப்பகுதியிலும் படர்ந்து இருக்க.. பின்னங் கழுத்தில்  பட்டுப்போல் மென்மையாக படர்ந்திருந்த  கூந்தலுக்குள் , ஐவிரல்களை நுழைத்து நெரித்தவன்.. அதில் தன் முகத்தை புதைத்து ஆழமாக மூச்சை இழுத்து நுகர்ந்தான் . அதன் நறுமணத்தை நுரையீரல் முழுவதும் நிரம்பிக் கொள்ள.. அவள் மீது இருந்த பித்து அதிகரித்ததாய்..

" அப்படி என்ன ஷேம்பு டீ.. நீ யூஸ் பண்ணுவ.. ", என்று மோகத்தின் பிடியால் கரகரப்பாய் கிசுகிசுத்து சரண் தன் சந்தேகத்தை கேட்டிட ,

" ஷாம்பு இல்ல.. பச்சை பயிறு.. செம்பருத்தி இலை..", என்று கிறங்கிய நிலையிலும் கவனமாக அவன் கேள்விக்கு, ஆசை மனைவியோ பதில் அளித்திருந்தாள்.

" ம்.. செம சாஃப்ட்.. அப்படியே..", என்று தன் ரகசிய பேச்சால் அவளை அதிர செய்ததில்..

" ச்சீ..", என்று வெட்கம் கொண்டு சிவந்து நின்றவள்.. பட்டென்று , விலகி.. அவசரமாக , அவள் கரத்தால் அவன் வாய் பொத்த.. பொங்கிய சிரிப்பை விழுங்கியவனாக ,

" உண்மையை தானே டீ சொன்னேன்..", என்று அப்பாவியாய் கூறியவனின் முரட்டு இதழ்களோ , ஒவ்வொரு விரலையும் எச்சில் செய்து.. குறுகுறுக்க செய்யவும்.. பட்டென்று எடுத்து..

" நீங்க ரொம்ப மோசம்..", என்று அவள் சிணுங்க..

" என்ன பாப்பா.. ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள மோசம்னு சொல்லீட்ட..", என்று விஷமமாக சிரித்து , மீண்டும் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்...

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now