வா.. வா.‌. என் அன்பே - 47

1.4K 47 14
                                    

பகுதி - 47

வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து ரிச்சர்ட்டின் பார்வை.. தாராவையே வட்டம் அடித்துக் கொண்டிருக்க.. அவளோ , அவனால் ஏற்படும் அவமானத்தை தாள முடியாதவளாய்.. மறுகி.. தன் கோபத்தை மறைக்க முடியாமல் திண்டாடியவளாய்.. அமைதியாக , உடையை மாற்ற.. அவள் பயன்படுத்தும் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் ‌. அவளது செயலில் இருந்த வருத்தம் கூட தெரியாதவனாய்.. உல்லாச மனநிலையில் இருந்தவன்.. தன் வெண்ணிற பற்கள் தெரிய சிரிப்பை உதிர்த்தவனாக , அவனுடைய அறைக்குள் நுழைந்துக் கொள்ள.. அலுவலக அழைப்பு வரவே , அதில் மூழ்கிவிட்டான் . தாராவின் அமைதியோ , அவள் அழுகையால் சிவந்து இருந்த விழிகளோ.. வெகுநேரம் அவன் பார்வைக்கு விலாமலே போனது . முக்கிய விபரங்களை சந்தோஷிற்கு மெயில் அனுப்பிய பிறகே , தன் மனம் நிறைந்தவளின் நினைவு வர.. சோம்பல் முறித்தவனாக.. வெளி வந்து பார்ததால்.. அவளது அறைக் கதவு திறந்தே இருந்தது..  சமையற்கட்டில் , இருப்பது போல் அரவம் கேட்கவே.. மாலையின் உற்சாகம்.. ஊற்றெடுத்தவனாய் , மெல்ல , இடதுபக்கமாய்.. நகர்ந்தவனின் பார்வை வாயிலில் இருந்தபடியாக , மென்மையாக வருடினாலும் , உதடுகளோ..

"உனக்கு இங்க என்ன வேலை..", என்று அந்நியத் தன்மையோடு வெளி வந்திருக்க.. வெடுக்கென்று, நிமிர்ந்தவளின் விழிகளில் விரவி இருந்த வலியால்.. திகைத்துவிட்டான் .

" என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க.. ", என்று அவளுக்கு எதுவும் குடும்பத்திலோ.. தொழிலிலோ ஏதும் சங்கடங்களோ என்று பதறியவனாய்.. ஆனால் , அவளுடைய குற்றச்சாட்டும் பார்வையில் தெளிந்தவன்.. " ஏய்.. என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க..", என்றான் .

" ஒன்னுமில்லை‌.. நான் கிளம்புறேன்.. ஒரு மணிக்கு ஃப்ளைட்..", என்று தண்ணீரை சுடு பண்ணியவளாக தெரிவிக்க..
தன் நெற்றியை சுருக்கியவன்..

"திடீர்னு என்னாச்சு..", என்றான் கூர்மையாக..

" ஒன்னும் ஆகலை.. ஒன்னுமே ஆகலை சாமி.. போதுமா.. சாக்கு கிடைச்சிடுச்சுன்னு.. உரசாதேன்னு சொன்ன.. இனி.. உன்னை தங்க வைச்சத்துக்காக.. என்னோட.. ப.டு..க்..க...", பளார்.. என்று அறைந்த சத்தமும்.. அவளது கரத்தில் இருந்த எவர்சில்வர் தண்ணீர் ப்ளாஸ்க்.. உருண்டோடிய சத்தம் மட்டுமே.. அந்த மூன்று அறைக் கொண்ட  வீட்டை நிறைத்திருந்தது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now