வா.. வா.. என் அன்பே - 29

1.5K 34 12
                                    

பகுதி - 29

கோயிலுக்குள் நுழைந்தவள் அவனையும் கவனியாது வேகமாகவே செல்ல.. பல வருடங்களுக்கு பிறகு சரணின் கண்களும் முகமும் தன் உண்மையான சிரிப்பை மீட்டெடுத்திருந்து.. இருக்கும் மனநிலையில் அவனும் அவள் கண்டுக்காமல் சென்றதையும் ரசித்தவனாகவே பின்னோடு , சென்று அவளை நெருங்கி சன்னிதியின் முன் நின்றிருந்தான் .

சரண் மித்ரனின் மனநிலைக்கு மாறுதலான நிலையில் தாமரை இருந்தாள் . அவன் மடியில் அமர்ந்ததில், அவள் உடலில் ஏற்பட்ட குறுகுறுப்பா.. இல்லை வேறெதுவுமா என்று நினைக்க முடியாமல் இருக்க.. எழுந்தருளி இருந்த பெருமாள் மற்றும் மகாலக்ஷ்மியின் அலங்காரத்தில் குழப்பங்கள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டு.. அழகில் லயித்தவளாக ஆழ்ந்துவிட்டாள் . ஐயர் ஆராதணையை நீட்டியவடன் சரண், 500 ரூபாய் தாளை எடுத்துப் போட்டதும்.. அவரின் மனம் குளிர்ந்து வாயெல்லாம் பல்லாக.. அவன் கரத்தில் சுவாமி மேல் இருந்த மாலையை கொண்டு வந்துக் கொடுத்தார்.

இவ்வளவு நடந்த பிறகும், அவளுக்கு கண் திறக்கும் யோசனையே இல்லை போலும்.. லேசாக, அவள் தோளை இடித்து அழைத்தவனை யாரென்று பார்க்க.. மீண்டும் அதிசயத்தை கண்டது போல் விழி விரித்தவளை கொலைவெறியோடு முறைத்தவன்.. " போ.." என்பது போல் சைகை.. முன் நோக்கி காண்பிக்கவும் செய்தான்.

" ம்.." என்று முன்னேறியவளை உரசிக் கொண்டே நடந்தவனின் செயலில்‌‌.. அச்சிறுப்பெண்ணுள் முதல் முறையாக ஒருவித தடுமாற்றம்.. அதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஒவ்வொரு லஷ்மியாக கும்பிட்டு வலம் வந்தவர்கள்,. பெரும்பாலான இடத்தில் ஐயர்கள் இல்லாமல் இருக்க.. மீண்டும் சந்தானலஷ்மியின் சன்னிதியில் ஆராத்தி வழங்கப்பட.. வள்ளல் அவன் மீண்டும் ஒரு இரு நூறு ரூபாய் தாளை.. தட்டில் வைக்கவும்.. அதிக மரியாதை கொடுத்தவர்.. இலவசமாகவே அவளது கரத்தில் இருந்த மஞ்சட் கயிறை கொடுத்து குங்குமத்தையும் வழங்கினார்.

மாலையும் அலைபேசியும்.. ஒருகையிலும் அவர் வழங்கிய குங்குமம் ஒரு கையிலும் வைத்திருந்ததால்.. நெற்றியில் பூசிக்கொள்ள முடியாமல் இருக்கவே.. அவன் கரங்களில் உள்ளதை அவள் முன் நீட்டியவன்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now