வா.. வா.. என் அன்பே - 40

1.4K 40 10
                                    

பகுதி - 40

அலுவலகத்திற்குள் நுழைந்ததில் இருந்து , குதறியவனாய் சரண் இருந்தான் . சினம்  என்றால் அப்படியொரு சினம்.. சிறு தவறுக்கும் குதறும் வேங்கையாய் மாறி , அனைவரையும் கலவரத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தான் . தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமல்லாது , அவனுடயை தலைமை அலுவலகத்திலும் அதே நிலை.. அவள் இல்லாமல் அவன் இல்லை என்பதை செயல்களின் மூலம் உணர்த்திய பின்பும் , நேற்று இரவில் இருந்து தன்னை விலகியிருக்கும் மனைவியின் மீது காண்பிக்க வேண்டிய கோபத்தை , தனக்கு கீழ் உள்ளவர்களிடத்தில் காண்பித்து எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்கிறான் . நேற்றைய இரவில் தான் விறைத்து விலக்கி வைத்தாள் என்றால் , காலை முதல் கண்களிலும் தென்படவில்லை.. விழிக்கும் பொழுதே , கையணைப்பில் வைத்து.. மதி முகம் பார்க்க வேண்டும் என்று சிந்தித்தவனின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது போதாமல் , கீழ் இறங்கி.. அவள் அதிகம் விரும்பி மறைந்துக் கொள்ளும் இடத்திலும் ( அதாங்க , சமையலறை..😁😁😁) தேடினால் , அங்கும் இல்லாததோடு , வீட்டிலேயே இல்லை.. " எங்கே அவள் ..", என்று கேட்டால், " கோவிலுக்கு ..", என்று கூறிய சாவித்திரியின் கூர்மையான பார்வைக்கு பதில் அளிக்க விரும்பாமல் , அன்றாட வேலைகள் செய்து அலுவலகத்திற்கு தயாராக கிளம்பிய பின்னும் , அவள் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை ‌ . ஒருமுறைக்கு , இருமுறை அவளை பற்றி விசாரித்தால் , அவன் கௌரவம் என்ன ஆவது.. அதனால் , வாயே திறக்காமல் இருந்தவனுக்கு.. வீட்டிலேயே , மெல்லியதாய் படர்ந்த எரிச்சலோடு.. காலை உணவும் உண்ண விருப்பமில்லாமல் வெளியேறியவன்.. புயல் வேகத்தில் தன் வாகனத்தை கிளப்பி இருந்தான் .

இரு தினங்களில் , படப்பிடிப்பிற்காக வெளிநாட்டு பயணமும் காத்திருக்கிறது.. சென்றால் , குறைந்தது..  கட்டாயமாக , தொடர்ந்து முப்பது நாட்கள்.. அவளை பிரிந்து இருக்க  வேண்டும்.. அங்கு வேலையின் சூழ்நிலையால் எத்தனை நாட்கள் ஆகுமோ.. என்று மனம் வெதும்பியவனாய் அவன் இருக்க.. தன்னை நெருங்க விடாமல் உறங்கியதோடு அல்லாமல்.. கண்களிலும் படவில்லை.. என்று பொங்கிக் கொண்டிருப்பவனிடம் மாட்டியது என்னவோ.. அவன் எதிரில் அகப்படுபவர்கள் மட்டுமாக இருந்தார்கள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now