வா.. வா.. என் அன்பே - 99

1.5K 44 21
                                    

பகுதி - 99

" மேம்..", என்று அவளை அழைப்பதற்கும் சத்தம் வந்து வரவில்லை ரேகாவிற்கு .

" அய்யோ.. என்னாச்சு இவங்களுக்கு.. இப்போ எங்கேன்னு தேடுறது.. ", என்று பதறியவர் மயூரியை நாடி ஓட.. அவரோ , முக்கியமான நிறுவன கருத்தரங்கில் இருந்தார் .

அவ்வளவு வேகமாக , அந்த ஹோட்டலை விட்டு வெளியேறிய தாமரைக்கோ.. நெருப்பு அடங்க மறுத்ததாய்.. அவளின் வருகையை கண்டுக் கொண்ட வாகன ஓட்டி , "மேம் ..", என்று வழி நடத்த.. தன் வேகம் குறையாதவளாய் வண்டியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாலும்.. எரிமலையின் சீற்றம் அடங்க மறுத்ததாய்..

' என்னை பார்த்தா எப்படி இருக்கு எல்லோருக்கும்.. என்னமோ , அவ்வளவு கேவலமா பார்க்குறா.. இவளை விட எந்த வகைல நான் குறைஞ்சு போயிட்டேனாம்.. போகுது.. போகுதுன்னு அமைதியா போனா.. கண்டவங்களும் சீண்டுறாங்க.. இருக்கு அவளுக்கு.. இவ பெரிய அழகின்னா.. அது அவளோட.. என்னை கேவலமா நினைக்க.. இவ யாரு..' என்று தன் உள்ளக் குமுறலின் வேகம் கால்களிலும்.. கைகளிலும் தாண்டவம் ஆட.. பத்தே நிமிடத்தில் , கீழ் இறங்கி வந்திருந்தாள் .

" ம்.. போலாம்..", என்று வாகன ஓட்டியின் மீதும் எரிச்சல்லை கொட்டிக் கவிழ்க்க.. அவனால்.. அவளது மாற்றத்தை பார்த்ததும்  , அவள் கட்டளையும் காதில் விழுந்து இருக்கவில்லை .

" சங்கர்..", என்று அழுத்தமான தாமரையின் அழைப்பிற்கு பிறகே.‌. பூமிக்கு திரும்பியவன் , " ஸ்.. ஸ்.. ஸா.. ஸா..ரி.. மேம்..", என்று தடுமாறி.. மீண்டும் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு செலுத்தினான் .

' ஆள் பாதி.. ஆடை பாதி.. நீ  எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.. ஆனா , உன் நேச்சரான சிம்பிளிசிட்டியை எல்லோரும் நல்ல விதமா பார்க்க மாட்டாங்க.. ஸோ , என் பாப்பா.. இடத்துக்கு தகுந்த ட்ரஸ் போடணும்.. ஓகேயா..', என்று அவனது தாடை ரோமங்கள் பின்னங் கழுத்தில் உரச.. மெதுவாக , அவனது ரோஜா இதழ்கள்.. தன்னை நாடி அவனுக்குள் சுருட்டி வதைத்துக் கொண்டு கூறியதே  ஞாபகத்தில் ஊற்று எடுத்து..  அவன் கை சிறகுக்குள் நுழைந்துக் கொள்ளவே மனம் தவியாய் தவித்திருந்தது .

வா.. வா... என் அன்பே...Wo Geschichten leben. Entdecke jetzt