வா.. வா.. என் அன்பே - 44

1.4K 41 14
                                    

பகுதி - 44

அந்த கட்டிடமே இடிந்து விழும் அளவிற்கு, கர்ஜித்தவனை கண்டு.. அச்சத்தால் , இரண்டடி பின்னே நகர்ந்திருந்தாள் தாமரை . ஏற்கனவே, அவமானத்தில் குறுகி நின்றிருப்பவளுக்கு.. இப்பொழுது சரணும் , அவ்வாறு கூறி.. இதயத்தை கசக்கி பிழிந்து மரண அடியை வழங்கியதில் .. தாமரையின் நிலை வரையறுக்க முடியாததாகவே இருந்தது என்றால்.. அங்கு பணிபுரிவர்களுக்கோ.. இதயம் தொண்டையில் வந்து நின்று.. அடைத்துக் கொண்டது போல் ஆனது .

தாமரை.. அவளிடத்தில் கூறுவதாக நினைத்து.. பூமிக்குள்ளேயே தலையை விடுபவளாக குனிந்திருக்க.. ஆனால் , அவனது சிவப்பேறிய விழிகளோ , எதிரே நின்றிருந்தவர்கள் மீது இருந்தது .

" ஸார்.. ஷீ... டு..க்.. த..ட்..", என்று ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல் ,

" ஷட் ஆப்.. ", என்று வாய் அடைக்கச் செய்தவன்..

தாமரையின் அருகே சென்று.. வேகமாக , அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி.. நேருக்கு நேராக முகம் காண வைத்து , " என்ன நடந்தது..", என்று கூர்மையுடன் வினவ.. மென்குரலில் , நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாலும் , விழிகளை இறுக்கமாக மூடி.. அழுகையை அடைக்கப் போராடிக் கொண்டு ,தனக்குள்ளேயே உழன்றவளாக இருந்தவளின் செவிகளில்.. திடீரென்று , அவன் குரல் செவிகளை தீண்டி சில்லிட வைத்திருந்தது .

" இவ்வளவு நடந்தும்.. உனக்கும்.. என்னை உன் புருஷனா வெளில சொல்லிக்க முடியலை.. இல்லை..", என்று எவருக்கும் கேட்காதவாறு.. கூர்மையாக வினவவும்.. அவள் விழிகளில் வழியும் வலியையும் விட அதிகமாகவே , தெரிந்ததோ.. என்று திகைத்து நிற்கும் பொழுதே.. அவளைவிட்டு விலகியிருந்தான் ,

" மாம்.. இன்னும்.. ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம் கூட.. இந்த ஃப்ளோர்ல வொர்க் பண்ணினவங்க.. யாரும் இனிமேல் இங்க இருக்க கூடாது.. எல்லோரையும் வெளிய அனுப்புங்க..", என்று கட்டளையிட்டவனாய்..
புயல் வேகத்தில் வெளியேற முயன்றவனை.. அவசரமாக பேசிய தாமரையின் குரல் , "அத்தை.. பாவம் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க..", என்று கூறி அவனை தேக்கியிருந்தாள். அதே வேகத்தில் திரும்பியவனின் கூர்மையான பார்வையை .. ஏறிட தைரியம் அற்றவளாக , மயூரியின் பக்கமாக தன் பார்வையை திருப்பிக் கொள்ள..

வா.. வா... என் அன்பே...Där berättelser lever. Upptäck nu