அன்பே - 10

1.3K 31 7
                                    

பகுதி - 10

இன்றும் குண்டு பல்பு எரியும் வீடுகளும் உண்டு . அதுவும் சென்னையில்.. பெரிதும் புகழ் பெற்ற வடபழனி ஏரியாவில் உள்ளது , என்பதை , தாமரையின் வீட்டை பார்க்கும் பொழுது நம்பத்தான் வேண்டும் .

கதவை மீண்டும் தட்ட.. அது திறக்கப்படாமல் போகவும்... ஒரு வாரமாய் அலைந்த களைப்பு.‌‌.. வீடு வரும் வரை தெரியாமல் இருந்தது . இப்பொழுது பாடாய்படுத்த.. தொய்ந்து விழும் கால்களை கட்டுப்படுத்தியபடி , மீண்டும் வேகமாக.. தட்டி... " அம்மா..."  என்றழைத்தாள்.

அலிபாபா குகை போல்.. நான் திறக்க மாட்டேன் , என்று அழுச்சாட்டியத்தில் கதவிருக்க.. தொய்ந்து விழும் உடலையும் , பசியால் அலறும் வயிற்றையும்.. எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியும் . தாங்களின்  இடம் வந்து சேர்ந்தாகி விட்டது என்று கண்களுக்கு மட்டுமல்ல அவைகளுக்கும் புரிந்திருக்கும் போல்  , வெகுவாக படுத்த தொடங்கியதில் , கதவின் நிலையிலேயே கையை வைத்து தாங்கியவளாய்..

மீண்டும் " அம்மா... " என்று ஆங்காங்கே... வெடித்திருந்த மரக்கதவின்.. இரும்புப்பிடியை மீண்டும் ஆட்டி அழைத்ததில் , உள்ளே இருப்பவருக்கு கேட்டதோ இல்லையோ ? எதிர் வரிசையில் இருந்த பெண்மணிக்கு எட்டிவிட.. வேகமாக வெளி வந்தவர்.. " தாமர.."  என்று , அவள் பின் நின்று விளித்திருந்தார் .

" அக்கா... அம்மா எங்கக்கா ? " என்று கேள்வி கேட்டவளை கண்டுக்காமல்..

" அட !  இதை கொண்டா.."  என்று பொதி மூட்டையாய் சுமந்து நின்றிருந்த பையை அவள் கரத்திலிருந்து வாங்கியவர் .

" இதுகல.. அங்குண வச்சுட்டு.. அழைச்சா என்ன..? "  என்று மிகவும் வெசனப்பட்டவராக ,

" நீ வா புள்ள.. " என்று தன் வீட்டிற்கு அழைத்து சென்றார் . அந்த நடுத்தர வயது பெண்மணி சுந்தரி .

" தண்ணி கெடக்கேக்கா.. நா எங்குன... வைக்க.. அம்மா இல்லையா ? பாப்பாவும் இல்ல போல ? " என்று தன் பெட்டியை சுமை மூட்டையாக தூக்கி நின்றிருந்த காரணத்தை விளக்கியவளாக கூறியவாறே , அவருடன் நுழைந்தவளிடம்

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now