வா.. வா.. என் அன்பே - 19

1.8K 30 7
                                    

பகுதி - 19

தாமரை கூறியதை கேட்டதும்.. அனைவரும் அமைதியில் இருக்க.. மயூரியால் மட்டும் தாங்க முடியாதவராக.. கொந்தளித்துவிட்டார்.

"நீ இப்ப என்ன சொல்ற.. என் பையன்.. உன் தம்பி தங்கச்சிய கடத்தி வச்சுருக்கான்னா.. சொல்லு.. உன்னை யாரு அனுப்பி வச்சா.. இல்லை எவ்வளவு பணம் எங்கட்ட நீ எதிர்பார்க்குற.. " என்று கோபப்பட்டு கத்தவும்..

திகைத்து.. பயத்தில் மேலும் விழிகளை விரித்தவளாக.. மருண்டு நின்றிருக்க.. ராம் வேகமாக மனைவியை அணைத்து.. அடக்க முயன்றார்.

" என்ன விடுங்க ராம்.. இப்ப எதுக்காக என்னையே கன்ட்ரோல் பண்றீங்க.. இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.. நம்மகிட்டயே வந்து நம்ம பையனை தப்பா சொல்றதுக்கு.‌." என்று ஆத்திரம் அடங்க மறுத்தது.

" நான்.. நான்.. என் தம்பி.. தங்கச்சிக்காக.. உங்ககிட்ட வரல.. ஏன்னா.. ஸாராலா‌‌.. அவங்களுக்கு எப்பவும்.. எந்த ஆபத்தும் வராது.. அவிய.. இப்படி நடந்துக்க.. நான்தேன்.. காரணம் . தப்பு என் பக்கம் தான்.. இப்ப நான் வந்தது.. உங்க எல்லாருக்கும் உண்மைய சொல்லதான்.. "என்றாள் பதற்றமாக,

" என்ன பெரிய உண்மைய சொன்ன.." அதே கோபம் குறையாதவராக..

"என்னை.. என்..னை.. அவிய பொண்டாட்டியா நடிக்க கூப்பிடறாகன்ற உண்மைய... அடுத்தவியல.. ம்.. என்று செறுமி.. எது செஞ்சாலும்.. திருட்டோ.. பொரட்டோ.. இருக்க கூடாதுன்னு எங்கம்மா.. சொல்லி சொல்லி வளத்தாக.. அவியல.. பறிக்கொடுத்து முழுசா.. ஆறு மாசம் காங்களை.. அதுக்குள்ள.. குடி கெடுக்குற பாவத்தை என்னைய.. ஸாரு.. செய்ய சொல்றாக.. அது செய்ய மனம் வராமேதேன்.. உங்க முன்னாடி நான் நிக்கேன்.. மறந்தும்.. பணத்துக்காக வேண்டி இல்ல.. பணம் எனக்கு தேவைதே.. அதுக்காக அடுத்தவங்கள ஏமாத்தி சோறு திங்க.. என்னையால முடியாது.. என்ற மனசு ஆறுதலுக்காகதேன்.. இங்குன வந்தேன்.. உங்கட்ட எல்லாத்தையும் சொன்னே.. உங்கட்ட சொன்னா.. எல்லாம் மாறிப் போயிடும்னு நினைச்சு வரலை.. அவிய.. கூட்டியாற பொண்ணு நிரந்தரமில்லை..ன்னு சொல்லதான் வந்தேன்.. அது நானா இல்லாம.. வேற யாரு வந்தாலும்.. அதேன் நிலைம.. நீங்க அவிய நல்லா இருக்கனும்னு தான் கல்யாணம் பண்ணி பாக்க ஆசைபடுறீயா.. ஆனா அதைய புரிஞ்சுக்காம.. பிடிவாதமா.. எதைஎதையோ செய்ய போறாவ.. நீங்க யாரும் உண்மைன்னு நம்பிடாதிய.. ன்னு.. சொல்லதான் வந்தேன்.. உங்க காசுக்காக நான் யோசிக்கல.. நீங்களே நினைச்சாலும் நான் வரதை மாத்த முடியாது.. ஆனா.. நீங்க பயப்படுற மாதிரி.. எனக்கு.. ஒத்த பைசா.. இங்கனயிருந்து  வேணாம்.. எடுத்துட்டும் போக மாட்டேன்.. நா.. வாரே..ன்..", என்று அவர்கள் முன் அழுகவே கூடாது என்று நினைத்தவளாய் பேசினாலும்.. பேச.. பேச.. வழியும் கண்ணீரையும் நிறுத்தும் வழி தெரியாமல்.. புறங்கையால் துடைத்துக் கொண்டே பேசினாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now