வா.. வா.. என் அன்பே -119

894 43 11
                                    

பகுதி - 119❤️

சரண் அவ்வாறு பேசவும் ஏனோ , தாமரையால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை . ' நான் என்ன இவியட்ட இப்படியா இருக்கேன் . கோபத்தில் பேசுறது கஷ்டமா இருந்தாலும் , எப்பவும் விலகி போனது இல்லையே.. ', என்ற ஆதங்கம் மிதமிஞ்சியதாய் . ' அது எப்படி என்னை தீண்டாமல் இருக்கலாம்..', என்று கணவனின் நெருக்கத்தையும் எதிர்ப்பார்த்து காத்து இருந்தது வேறு.. அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் , அவனை போலவே ஒற்றை முத்தத்தில் தன் மொத்த கோபத்தையும் காண்பித்தாலும் , வாய் சண்டையையும் நிறுத்தும் எண்ணம் இல்லாதவளாக , மீண்டும் , அவன் இதழ்களுக்கு விடுதலை அளித்து உரசியவாறே

" நானாவா பேசினேன் . நீங்க என்னை பார்த்து கேட்ட கேள்வில பத்துல ரெண்டைக் கூட உங்களுக்கு நான் சொல்லிக் காட்டலை . அதுக்குள்ள , உங்களுக்கு எரியும்னு திருப்பி படிக்கிறீங்க ‌ . ஆ..மா , எனக்கு எரியுதுதேன். இப்பவும் , எரியதேன் செய்யுது . என்ன செய்ய போறதா உத்தேசம் . ம்..  அது எப்படி.. அது எப்படி.. எப்படி..  நீங்க உங்க கோபத்தை விட்டு ஈகோவை விட்டு வந்தீயளோ . ( மேலும் கொத்தாக அவன் சட்டையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவளாய் ) கோபத்தை விட்டுன்னு வேணா சொல்லுங்க . உங்க ஈகோ விட்டு வந்ததா கதை விடாதீய . அதை நம்ப நானொன்னும் கேணச்சி ( முட்டாள் )  கிடையாது .  அது , உங்களுக்கு நான் எப்படி போயும் போயும் மான்சி யக்கா வீட்டுக்கு போகலாம்னே ரோஷம் பொத்துகிட்டு வந்ததுல தூக்கீட்டு போக வந்தீயன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்.‌.", என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவளாய் . உச்சத்தில் இருந்து கத்தாமல் அதேசமயம் ,  அழுத்தம் திருத்தமாக ஆக்ரோஷமாவே  அவன் மனநிலையை அவள் எடுத்துக் கூறியதில் சரணே பிரம்மித்துவிட்டான் .

அவன் சிறு அசைவையும் அச்சுப்பிசகாமல் , கூறியவளை பேரதிர்ச்சியுடனே பார்த்து இருந்தான் . சிறுவயது முதல் பழகிய விக்கியும் இந்த அளவிற்கு அவனை ஒருநாளும் சரியாக கணித்ததே இல்லை என்று திறந்த வாய்மூட மறந்தவனாய் சரண் மித்ரன்  .

வா.. வா... என் அன்பே...Tahanan ng mga kuwento. Tumuklas ngayon