பகுதி - 36
சரணிற்கு கட்டுப்பட்டவளாய்.. உடனே , கிளம்பியிருந்தாலும்.. தாய் தங்கையின் புகைப்படத்திற்கு முன் நின்று கண்ணீர் வடித்தவளுக்கோ , காலை மாலை.. தீபம் ஏற்றவும் இயலாதோ.. என்று எண்ணம் எழுந்தாலும்.. அவனிடத்தில் , அதைப் பற்றி கூறுவதற்கோ.. இல்லை எடுத்துச் செல்வதற்கும் தைரியம் அற்றவளாய்.. ஏக்கமாக பார்த்தவாறு நின்றிருக்க.. அழுத்தமாக , நின்றிருப்பவனுக்கும் .. அவளுடைய மனநிலை நன்கு புரிந்தே இருந்தாலும் , அமைதியாக நின்றிருந்தான் .
சாந்தியிடம் நெருங்கியவள்.. "அக்கா.. பாத்துக்கங்க.. நான் போயிட்டு வரேன்.. க..க..பி..ல.ன்.. எங்க.. காலையில் இருந்து பாக்கவே இல்லையே.. கடைக்கு போயிருக்கானா.. ", என்று விம்மி வெடிக்க காத்திருக்கும் அழுகையை அடிக்கியவளாய்.. விழிகளை சுழற்றி கேட்டிட.. சரணின் அழுத்தம்.. மட்டுப்பட்டிருந்த கோபத்தை.. கிளப்பிக் கொண்டிருந்தது ரிச்சர்ட்டிற்கு.. அவனிடம் தன் முறைப்பையும் காட்ட இயலாதவனாய்.. வேகமாக , இருவருக்கும் இடையில் நுழைந்தவனாக.. " தாமரை.. இன்னும் எத்தனை நாளைக்கு அவனை ஸ்கூல்லுக்கு லீவு போட சொல்ல முடியும்.. அதுனால , காலேலையே விட்டுட்டு வந்தாச்சு.. நீ மொத்தல்ல நல்ல படியா கிளம்பு.. நாங்க பார்த்துக்குறோம்.. உனக்கு எதுனாலும் நாங்க இருக்கோம்ங்கறதை மட்டும் மறக்க வேணாம்.. புரிஞ்சதா..", என்று மிக மிக அழுத்தமாக உள்ளடக்கிய குரலில் கூறியவன்.. கடைசி வாக்கியத்தை.. சொல்லும் பொழுது , எவ்வளவு முயன்றும்.. தன் சினத்தை மறைக்க முடியாதவனாக.. தீப்பார்வையை சரணிடத்தில் வீசியவனாக கூறிட.. தன் தெனாவட்டான அலட்சியப் பார்வையை மட்டும் கைவிடாதவனாக அவன் நின்றிருந்ததில்.. மேலும் அவனுள் உஷ்ணத்தை கிளப்பிக் கொண்டிருக்க.. இது எதுவும் , அவள் கண்களில் விலாமலே போனது..
தொடர் ஷூட்டிங்கில் இருந்து வந்ததால் உதய்தாரா நல்ல உறக்கத்தில் இருக்க.. தொல்லை பேசியாய் அலைபேசி மாறி.. விடாமல் அடித்து அவளை எழுப்பியது.. அதிக உடல் சோர்வு , அவளுக்கு பிடித்த அந்த பாடலின் சத்தமும் முதலில் எட்டாமல் போனதில் வியப்பில்லை . ஆனால் , அழைத்துக் கொண்டு இருந்தவனின் பொறுமை எல்லையை கடந்ததில்.. அவனுடைய அலைபேசி முழுமையாக அணைக்கப்பட்டிருந்தது .
ESTÁS LEYENDO
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...