வா.. வா.. என் அன்பே - 121

1K 47 20
                                    

❤️ பகுதி - 121 ❤️

வீரா அவ்வாறு கூறியது பெரிதும் திகைத்து நின்ற மஹா விக்கிக்கு முன்பாக சுதாரித்து , " வீரா..", என்று ஒரு அதட்டல் விடுக்க.. அவளை காக்கும் பொருட்டே வீராவின் கைபேசி ஒலி எழுப்பி இருக்கும் போலும் , சட்டென்று தன் கவனத்தை அதில் புதைத்தவள்.. நொடியும் தாமதியாமல் ,

" எக்ஸ்கியூஸ் மீ..", என்று இருவரின் முகங்களையும் நிமிர்ந்து பார்க்காதவளாகவே பரபரப்புடன் அகன்று இருந்தாள் .

அவள் துள்ளிக் குதித்து விலக , சில நிமிடங்கள் அவள் முதுகின் மீதே பார்வையை துழைத்தவளாய் மஹா இருக்க , பின் விக்கியை ஏறிட்டதும் , அவன் இரு புருவங்கள் முடிச்சிட்டு உடல் விறைக்க.. ஏன் கடுமையை தாங்கியவனாகவே நின்று இருந்தான் .

நல்ல உயரம் நிச்சயமாக ஆறு அடிக்கு கூடுதலாகவே இருப்பான் என்றே அவளுக்கு நினைக்க தோன்றியது . விரிந்த நெற்றி.. புருவங்களிலும் மீசை போலவே அடர்ந்து படர்ந்து இருக்க.. இரு விழிகளிலும் கூர்மை மிகுந்து இருக்க.. ட்ரிம் செய்யப்பட்ட மீசை தாடிக்கள் இல்லாத தாடை.. இறுகிய இதழ்கள்.. அதில் இருந்த கருமை அவன் சிகரெட் பழக்கத்திற்கு உரியவன் என்று அடையாளம் காண்பித்ததாய் . சட்டையை இறுக்கிப் பிடித்த கச்சிதமான உடற்கட்டு . சிறுத்த இடையும் அவள் கவனித்திற்குள் விழுந்து சிக்ஸ் பேக்கையும் வயற்றுப் பகுதிக்குள் ஒளித்து வைத்து இருப்பானோ என்று எண்ணத்தை ஓட வைத்து இருந்தது .

மஹாவின் பார்வை மேலும் அவனது இடையின் கீழ் இறங்க , அவனது கால்களோ நீண்டு பூமியை பளபளக்கும் காலணணிகளுடன் பதிந்து இருப்பதை பார்த்த பிறகே அவனை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்துக் கொண்டு இருப்பது அவளுக்கு புரிந்ததில்  , அவசரமாய் அவள் விழிகளை நிமிர்த்தினால் , விக்கியோ ஒற்றை புருவத்தை உயர்த்தியவனாய் நின்று இருந்தான் .

அதில் நொடிக்குள் குப்பென்று முகம் சிவக்க , சட்டென்று சுதாரித்தவளாய் மஹா அவனுடன் பேச நினைப்பதை மனதிற்குள் ஒத்திகை பார்த்தாலும் எப்படி துவங்குவது என்ற தடுமாற்றம் விரவி இருந்ததாய் . அவளுக்கு நிகரான நிலையிலேயே விக்கியும் நிற்க ,' ம்ஹூம்.. 'என்று லேசாக தொண்டையை செருமியவனாய் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now