❤️ பகுதி - 138 ❤️
தாராவின் அணைப்பை முற்றிலும் எதிர்பாராத ரிச்சர்ட் திகைத்து சிலையாக நின்றுவிட , நொடிக்குள் அணைத்த நிலையிலேயே நன்றியை கூறி விலகியவள் நட்பாய் புன்னகை சிந்தி வெளியேறிவிட்டாள் .
ஹா.. என்று வாய் திறந்து காற்றை வெளியேற்றி , தன்னை நிலைப்படுத்தியவனாக நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை தன் கைக்குட்டையால் அழுத்தமாக துடைத்து அவ்வறையில் இருந்து வந்தவன் தாராவை பார்க்க , அணைப்பின் பாதிப்பு ஏதுமின்றி அங்கு இருந்தவர்களிடம் இயல்பாக உரையாடிக் கொண்டு இருக்க.. அதுவரை அவன் மூளையை செயல் இழக்கச் செய்த திகைப்பின் பாதிப்பு , எங்கோ மறைந்துவிடவே , சட்டென்று கடுமையை பூசிக் கொண்டவன்.. அவளுக்கு எதிர்ப்புறமாய் சென்று பணிகளில் ஈடுபட்டு இருந்தான் .
சாந்தனின் வருகையில் , அவ்விடமே அமைதியை பூசிக் கொள்ள , ஓடி வந்த ஹஸினிடம் , "ஆரவ் எங்க.. என்ன எல்லாம் ரெடியா இருக்கா.. சரி முதல்ல க்ரௌட் ஷாட்டு எடுக்கணும்...", என்றவர் தன் கேமராமேனிடம் திரும்பி இருந்தார் .
அப்பொழுதே ரிச்சர்ட் அங்கு இருப்பதை கவனித்த சாந்தன் கையாட்டி அவனை அருகில் அழைக்க , சாந்தியுடன் இருந்தவன்.. தன் வேக நடையில் அவரை நெருங்கி ,
" ண்ணே..", என்று பணிவாய் நிற்க,
" என்னடா.. இந்தப்பக்கம்..", என்றார் வியப்பாய் ,
" வேலையா வந்தேன்.. ஆரவ் நிக்க சொன்னான். அதான்..", என்று அசட்டு சிரிஆப்பு ஒன்றை சிந்தியவனாய் ,
" நாய ஏவினா அது வாலை ஏவுதாடா..", என்று கிண்டலாக சிரித்தவரினுடன் அவனும் இணைந்து சிரித்தவாறே ,
" ண்ணே.. அவசரம் எல்லாம் சொல்லீட்டா வரும். நேத்துலேருந்து பைய பாத்ரூம்ல தான் குடித்தனம் நடத்துறான்.. அவனை கூட்டீட்டு வந்ததே நான் தான் .. ", என்று சரளமாக பொய் கூற ,
" வாத்தயாருக்கிட ஆரம்பிச்சதை இன்னும் நிறுத்தலடா நீங்க.. அவனை எங்க இருந்தாலும் சீக்கிரம் வர சொல்லு.. நீ இங்கதான.. வேந்தனுக்கு வேற வேலை கொடுத்து இருக்கேன்.. என்னை டென்ஷன் பண்ணாதீங்க..", , என்று கேள்வியாய் நிறுத்த ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...