வா.. வா.. என் அன்பே - 117

925 38 5
                                    

பகுதி - 117

கடந்த சில நாட்களாக தாமரையின் கோபம் , சரண் மித்ரனின் இதயத்தில் ஊடுருவி வலியை ஏற்படச் செய்து இருந்தாலும் , கர்ப்பிணி பெண்களுக்குஃ எ இயல்பாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் , அவளது சினமும் எக்ஸ்ட்ரீம் லெவலில் இருப்பதாக நினைத்தே மௌனித்து , குழந்தையையும் அவளையும் பாதுகாத்துக் கொண்டான் என்றே கூற வேண்டும் .

ஆனால் , இப்பொழுது அவளது கண்களில் தோன்றி மறைந்த மின்னலை கண்ட பிறகோ , அவள் வயிற்றில் குழந்தையுடன் இருப்பதால் மட்டுமே மான்சியின் வீடு என்றும் பாராமல் வந்து இருப்பதாக நினைத்து வருந்தி இருக்கிறாள் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்தது . ஆனால் , ஏன் மீண்டும் இந்த விலகல்.. அதுவும் தன்னிடம் ஏன் அவளது உணர்வுகளை காண்பிக்காமல் அவசரமாக வெளியேற வேண்டும் என்ற சிந்தனையால் தன்னைத் தானே குழப்பிக் கொண்டாலும் , "ரொம்ப படுத்துற டீ..", என்று புலம்பியவனாக , பெருமூச்சை வெளியேற்றி , தற்காலிகமாக அதனை ஒற்றி வைத்தவன்.. அறையில் இருந்து வெளியே செல்ல நினைக்க , அவளது அலைபேசியின் அலறல் சத்தம் .

' இவளுக்கு எதுக்கு மொபைல்ன்னே தெரியல..', என்று வாய்விட்டே புலம்பியவாறே , படுக்கையில் இருந்ததை எடுத்தவன்.. தன்னிச்சையாக ,  கண்கள் அதன் திரையில் பதிக்க.. சரணின் தாடை இறுக்கத்திற்கு தாவி , குழப்பம் தொலைந்து கடுகடுத்து போனதாய் .

லிஃப்ட்டிற்குள் இருந்து கீழ் இறங்கி வந்தவளோ மிகுந்த கவனத்துடனே , பாதத்திற்கு நோகுமோ அல்லது பூமிக்கு நோகுமோ என்று எண்ணும் அளவிற்கு மெதுவாகவே நடந்து சமையல் அறைக்குள் நுழைந்த மறுநிமிடமே ,

" வாடா ம்மா.. இவ்வளவு லேட்டா எழுந்திரிக்கலாமா..", என்று அவளை செல்லமாக கடிந்த சாவித்ரி , அவளுக்காகவே ஒரு நாற்காலி அங்கு  போடப்பட்டு இருக்க.. அதில் மெதுவாகவே அமர வைத்தவராக , "இந்தா இந்த டீயை குடி..", என்று அமர்த்தளாகவே கண்டிக்கவும் , சிறு புன்னகையுடன் பெற்றுக் கொண்டவள் , மெதுவாக பருகிக் கொண்டு இருக்கும் பொழுதே ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now