வா.. வா.. என் அன்பே - 116

974 50 5
                                    

பகுதி - 116 ❤️

குளிர்க்காற்று எங்கும் வீச , இரவு பனியின் ஈரங்களும் ஆதவனின் வருகையால் மெல்ல மெல்ல மாயமாகிப் போக , முழுதாய் விடைப் பெற்று செல்ல விரும்பாமல் , நீர்த்துளிகளாய் புற்களிலும் , இலைகளிலும் அவைகள் முத்துக்களாய் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கெண்டு இருக்க , பறவைகளின் ஊர்வலம் வானில் நடைப்பெற , புன்னகைக்கும் முகத்துடனே அழகிய ஆதவன் தன் காதலியோடு கரம் கோர்த்து.. அனைத்து உயிரினங்களையும் எ விழிக்கச் செய்து இருந்தான் .

காலை உணவு உண்பதற்காக , சாப்பிட அமர்ந்த விக்கியிடம் , மிகவும் அமைதியாகவே உணவு பரிமாறிக்கக் கொண்டு இருந்த விக்கியின் அன்னை லதாவின் முகத்தில் இருந்த அழுத்தம் , அவனுக்கு காலையில் இருந்த தலைவலியை கூடுதலாகிக் கொண்டு இருந்தது .

சில நிமிடங்களுக்கு மேல் , அன்னையின் அமைதியின் கணம் தாள முடியாதவனாய் ,

" என்ன ம்மா இது.. காலேலையே இவ்வளவு டென்ஷன் பண்றீங்க . காலங்கார்த்தால முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டு இருந்தா.. வெளில போறவன் எப்படி ம்மா நிம்மதியா என் வேலைய பார்ப்பேன் ..", என்று பிட்டு இட்டிலியை தட்டில் மீண்டும் வேகமாகவே தட்டில் தூக்கிப் போட்டு எரிச்சலுடன் வினவ ,

" ஏன் வீட்டுல நாங்க வேலைப் பார்க்கல..", என்று முணுமுணுப்புடன் சமையல் அறைக்குள் மீண்டும் நுழைந்து குடிப்பதற்காக தண்ணீர் பாட்டிலுடன் வந்து இருந்தார் ‌ .

" ம்மா.. ப்ளீஸ் ம்மா. என்னை நீங்களும் புதுசா டென்ஷன் பண்ணாதீங்க..", என்று தன் எரிச்சலையும் மறைக்க முடியாது அப்பட்டமாகக் காட்டிட ,

" நீங்களும்னா வேற யாரு..", என்று புருவம் சுருக்கி வினவிய லதாவின் முகத்தை ஏறிட முடியாமல் தடுமாறியவனாய் , உண்ணும் உணவில் பார்வையை பதித்தவவனிடம் , மீண்டும் அதே கேள்வியை கேட்டவராக‌ மகனை அழுத்தமாக பார்த்து இருந்தவரை தவிர்க்க முடியாதவனாய் ,

" இப்போ , ஏன் ம்மா திடீர்னு  கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரம் காட்டுறீங்க.. இவ்வளவு நாள் பொறுமையா தான இருந்தீங்க..", என்று தன் பொறுமையை இழந்தவனாக தாயிடம் எரிந்து விழுந்தான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now